இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளராக ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன

225 0

bribery-commission-1இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளராக ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தினை சட்டத்தரணி சரத் ஜயமான்ன சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நேற்றையதினம் (வியாழக்கிழமை) பெற்றுக்கொண்டுள்ளார்.

25 வருடங்களுக்கு மேலாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றிய சரத் ஜயமான்ன, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக நியமிக்கப்படும்போது, சட்டமா அதிபர் திணைக்களத்தில், அரச தலைமை சட்டத்தரணியாக கடமையாற்றினார்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர், பட்டப்பின் படிப்பினை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கற்றார். பின் இலங்கையின் சட்டத்துறையில் டீ.என்,ஏ மற்றும் தொலைபேசி சாட்சிகளைக் கண்டறிவதில் முக்கிய பங்காற்றினார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக இருந்த டில்ருக்சி தனது பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து சட்டத்தரணி சரத் ஜயமான்ன நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.