மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் இருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக 76 மாடுகளை கால்நடையாக நடாத்தி கொண்டு சென்ற 3 பேரை இன்று திங்கட்டகிழமை (02) அதிகாலை மட்டு கல்லடிப் பாலத்தைடயில் வைத்து கைது செய்துளளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்
மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிவுரைக்கமைய மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி 3 பேரை கைது செய்ததுடன் 76 மாடுகளை மீட்டு காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

