போப் ஆண்டவர் பிரான்சிஸ் லேசான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ புரூய்னி தெரிவித்தார்.
போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 83), கடுமையான ஜலதோஷத்தால் அவதியுற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக அவர் நேற்று முன்தினம் தொடர்ந்து மூன்றாவது நாளாக மக்கள் சந்திப்பு மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் பங்கேற்க வில்லை. அவர் போப் ஆண்டவராகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் தொடர்ந்து 3 நாட்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது இதுவே முதல் முறை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
போப் ஆண்டவர் பிரான்சிஸ் லேசான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ புரூய்னி தெரிவித்தார். ஆனால் இது தொடர்பான கூடுதல் தகவல்களை அவர் வெளியிடவில்லை. அதே நேரத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் தான் வசித்து வருகிற வாடிகன் விருந்தினர் மாளிகை சாண்டா மார்த்தாவில் வழக்கமாக நடைபெறுகிற காலை நேர பிரார்த்தனை கூட்டங்களை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

