தென்கொரியாவில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பில் ஆன்மிக தலைவரிடம் விசாரணை!

337 0

கொவிட் 19 தொற்று காரணமாக தென்கொரியாவில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பில், அந்த நாட்டின் ஆன்மிக தலைவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷின்சியோன்ஜி திருச்சபையின் நிறுவனர் லீ மான்-ஹீ உள்ளிட்ட அதன் 11 உறுப்பினர்களுக்கு எதிராக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கொரியாவில் கொவிட் 19 தொற்று ஏற்படும் அச்சம் நிலவிய போது, அதற்கான பட்டியல் ஒன்றினை தயாரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதன்போது தங்கள் திருச்சபையின் சில உறுப்பினர்களின் பெயர்களை மறைத்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சீனாவுக்கு வெளியில் கொவிட் 19 தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் தென் கொரியாவும் அடங்குகின்றது. இதுவரை தென் கொரியாவில் 3,736 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 21 பேர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, கொவிட் 19 தொற்றுகாரணாமாக உலகளாவிய ரீதியில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 8 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இந்த நோய்த்தொற்று காரணமாக இதுவரை 88 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை ஸ்கொட்லாந்துக்கும் இவ்வாறு கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.