ஒருமித்த கருத்து ஒருமித்த பயணமும்’ என்ற தொனிப்பொருளில்

300 0

சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய ஆட்சியாளர்கள் இணங்கினால் நிரந்தர அரசியல் தீர்வொன்று ஏற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒருமித்த கருத்து ஒருமித்த பயணமும்’ என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறானதொரு சந்தர்ப்பம் ஒன்று எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது ஏற்படுத்தப்படும் போது அதனை கருவியாக பயன்படுத்திக்கொள்வதற்கு சகல தமிழ் பிரதிநிதிகளும் ஒருமித்து செயற்பட வேண்டிய தேவை உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.