தரமணி டைடல் பூங்கா அருகில் பக்கிங்காம் கால்வாய் சுற்றுலா இடமாகிறது

211 0

தரமணி டைடல் பூங்கா அருகில் பக்கிங்காம் கால்வாயில் 2 கி.மீட்டர் தூரத்துக்கு சுற்றுலா இடம் உருவாக்கப்படுகிறது.

தரமணி டைடல் பூங்கா அருகில் பக்கிங்காம் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் சுற்றுலா இடத்தை உருவாக்கும் பணிகள் அடுத்த மாதம் தமிழக அரசு தொடங்குகிறது. சுமார 25 ஏக்கர் பரப்பளவில் 2 கி.மீட்டர் தூரம் உள்ள நிலப்பரப்பில் நவீன விளையாட்டு உபகரணங்கள், குழந்தைகளை கவரும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தை கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. தற்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த சுற்றுலா இடத்திற்கு வரும் பொது மக்கள் உணவை எடுத்து வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இங்கு வியாபார நோக்கு கடைகள் அனுமதிக்கப்படவில்லை. பக்கிங்காம் காவ்வாயின் கிழக்கு பகுதியில் அடர்ந்த மரங்கள் கொண்ட காடு உருவாக்கப்படுகிறது. இந்த பணிகள் ஒரு வருடத்தில் முடிவடையும்.

குழந்தைகளின் பாதுகாப்புக்காக பல்வேறு சிறப்பு அம்சங்கள் உருவாக்கப்படுகிறது. குழந்தைகள், முதியோர்களுக்காக மனம் கவரும் பொழுது போக்கு வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.

தி.நகர் நடைபாதை வளாகம் போல் இங்கு பல்வேறு சிறப்பு வசதிகள் உருவாக்கப்பட உள்ளது.

இங்கு பொது மக்கள் இயற்கையை ரசிக்கும் வகையில் பூங்காக்கள், புல்வெளிகள், மரம், செடிகள் உருவாக்கப்படுகிறது. பக்கிங்காம் கால்வாயில் உள்ள மாசுகளை அகற்றி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற உள்ளது.

தெளிந்த நீரோட்டம் ஓடும் வகையில் பக்கிங்காம் கால்வாய் பராமரிப்பு செய்யப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.