மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக அ.தி.மு.க.வில் இருந்து நல்ல முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.யால் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்காகத்தான் இத்தகைய சட்டங்கள் என்பதனை அனைவரும் உணர வேண்டும். இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் பாதிப்பு என்றால் அவர்களுக்காக களத்தில் இறங்கும் முதல் கட்சியாக தே.மு.தி.க. இருக்கும்.
தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய 2 கட்சிகளும் தமிழகத்தின் கடன் சுமையை மாறி மாறி ஏற்றுவதை நிறுத்தி விட்டு வேலைவாய்ப்பிற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நிர்வாகிகள் டி.வி. கணேஷ், மோகன், சாதிக் மற்றும் பலர் உடனிருந்தனர்.

