இலங்கை ஆட்சி மாற்றம் போல் அமெரிக்காவிலும் – கெஷாப்

298 0

atul_keshap-415x260மக்களால் மக்களுக்காக மக்களலால் ஆளப்படும் ஆட்சி மக்களாட்சி என்ற அடிப்படையில் 2015ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை போன்று அமெரிக்காவிலும் ஆட்சி மாற்றம் ஒன்று ஜனநாயக ரீதியில் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் தெரிவித்துள்ளார்.

புதிதாக அமெரிக்காவில் தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்பும், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் அமெரிக்காவின் ஜனநாயகம் குறித்து நேற்று கருத்துக்களை வெளியிட்டமையை அமெரிக்க தூதுவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், வெளிநாட்டு கொள்கைகள் மாற்றமின்றி தொடரும் என குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் இலங்கையுடன் இருந்த அதே உறவு புதிய டெனால்ட் ட்ரம்பின் ஆட்சியிலும் தொடரும் என அதுல் கெஷாப் தெரிவித்தார்.

ஐக்கிய இலங்கைக்குள் நல்லிணக்கம், சமாதானம், சமவுரிமை உட்பட்ட அனைத்து விடயங்களிலும் அமெரிக்கா துணையாக இருந்து செயற்பட்டு கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், அமெரிக்காவின் புதிய ஆட்சியிலும் இலங்கையின் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் புத்தூக்கமான வளர்சியையும் அமெரிக்க மக்கள் விரும்புகிறார்கள் என அதுல் கெஷாப் குறிப்பிட்டார்.