றொனால்ட் ட்ரம்புக்கு மைத்திரி, ரணில் வாழ்த்து!

372 0

ranil-maithri-1அமெரிக்காவின் 45ஆவது அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள றொனால்ட் ட்ரம்புக்கு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபாலசிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வாழ்த்துச்செய்திகளை அனுப்பிவைத்துள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமெரிக்கத் தேர்தலில் கிளாரிக்கிளின்டனை தோற்கடித்து றொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றியைப் பெற்றார்.

அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் ‘இந்த வரலாற்று வெற்றிக்கு வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

பிரமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் வெள்ளை மாளிகைக்கான ட்ரம்பின் பாதை உண்மையிலேயே குறிப்பிடத்தக்க ஒன்று. உங்களுடனும் உங்களின் குழுவுடனும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற எதிர்பார்த்திருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.