டெல்லியில் டிரம்ப் விருந்து- எடப்பாடி பழனிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு

208 0

டெல்லியில் டொனால்டு டிரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க வருமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது மனைவியுடன் 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது டிரம்ப்புக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பிரதமர் மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

டிரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் டிரம்ப் விருந்தில் கலந்து கொள்வதற்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தில் பங்கேற்க, எடப்பாடி பழனிசாமியும் முடிவு செய்துள்ளதாகவே தெரிகிறது.

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகிற 25-ந்தேதி நடைபெறும் இந்த விருந்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24 அல்லது 25-ந்தேதி டெல்லி புறப்பட்டு செல்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விருந்தின்போது அமெரிக்க அதிபர் டிரம்பை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விருந்தில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் டிரம்பை சந்திக்க மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.