காதலர் தினத்தில் புதிதாக இயக்கப்பட்ட மெட்ரோ ரெயிலில் சுவாரசியம்

58 0

மேற்கு வங்காளத்தில் காதலர் தினத்தில் இயக்கப்பட்ட மெட்ரோ ரெயிலில் பயணி ஒருவர் தனது காதலியிடன் ‘ப்ரபோஸ்’ செய்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. ஆண்களும், பெண்களும் தாங்கள் காதலிக்கும் நபரிடம் தங்கள் காதலை வெளிப்படுத்தினர்.
இதற்கிடையில் காதலர் தினமான நேற்று மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் நகரின் செக்டர் 5-ல் இருந்து சால்ட் லேக் ஸ்டேடியம் வரையில் புதிதாக மெட்ரோ ரெயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது.
காதலர் தினம் என்பதால் மெட்ரோ ரெயில் முதலில் பயணம் செய்த அனைவரையும் ரோஜா பூ கொடுத்து மெட்ரோ பணியாளர்கள் வரவேற்றனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அந்த ரெயிலில் தனது பெண் தோழியுடன் பயணம் செய்த ஆண் பயணி ஒருவர் தனது காதலை மெட்ரோ ரெயிலிலேயே தெரிவித்துள்ளார்.
அந்த ஆண் பயணி ரெயிலில் பயணம் மேற்கொண்டிருந்த போது திடீரென தனது காதலி முன் முட்டியிட்டு ரோஜா பூ ஒன்றை அவரிடம் கொடுத்து ப்ரபோஸ் செய்தார்.
மெட்ரோவில் காதலியிடம் காதலை வெளிப்படுத்திய காதலர்
இதில் இன்ப அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண் தனது ஆண் நண்பர் கொடுத்த ரோஜா பூவை வாங்கிக் கொண்டு அவரது காதலுக்கு சம்பதம் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஆண் பயணி தனது காதலியிடம் ரோஜா பூவை கொடுப்பது போன்றும் அதை அந்த இளம் பெண் வாங்குவது போன்ற புகைப்படத்தை கொல்கத்தா மெட்ரோ நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
காதலர் தினத்தில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரெயிலில் பயணி ஒருவர் தனது காதலியிடம் ப்ரபோஸ் செய்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.