கதிர்காமத்திற்கு பாதையாத்திரையாக சென்ற அடியார் குழுவினர் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் காட்டு யானைகள் தாக்கியுள்ளது.
சம்பவத்தில் ஜவர் காயமடைந்த நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குமண ஊடாக கதிர்காமம் செல்லும் வழியில் வண்ணாத்தி கிணற்றடி எனும் இடத்தில் பக்தர்கள் உறங்கிக் கொண்டு இருந்தவேளை திடீரென வந்த காட்டு யானைகள் அங்கு இருந்தவர்களை தாக்கியுள்ளது.
இதன்போது அடியார்கள் அல்லோலகல்லோப்பட்டு கத்தி கூச்சலிட்ட போது அங்கு விரைந்து வந்த இரானுவத்தினர் யானைகளை விரட்டி கதிர்காம யாத்திரையர்களை காப்பாற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஜந்து அடியார்கள் பாதிக்கப்பட்டதுடன் உடனடியாக இரானுவத்தினரின் உதவியுடன் உகந்தை குமண எனும் இடத்திற்கு எடுத்து வரப்பட்டு அங்கிருந்து பாணமை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஒரு பெண், ஒரு ஆண் இருவரையும் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு மேலதிகச் சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்த இரண்டு பெண்களில் ஒரு பெண் பொத்துவில் வைத்தியசாரையிலும், மற்றய பெண் பானமை வைத்தியசாலையிலும் ஒரு ஆண் பொத்துவில் ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு பழுகாமம் மற்றும் முகத்துவாரம் பிரதேசங்களைச் சேர்ந்தவரக்ள் என தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

