நல்லாட்சி காலத்தை விட மஹிந்தவின் ஆட்சியிலேயே அதிக மோசடி – பாலித

302 0

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீதும் பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்த தரப்பினரே பாரிய கொள்ளைகளைச் செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

மத்தியவங்கி பிணைமுறி மோசடி தொடர்பான தடயவியல் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் , இந்த மோசடி தொடர்பான மிகவும் தொடர்புக்கொண்டுள்ள சதிக்கரார்கள் யார் என்பது தொடர்பில் தற்போது தெரியவந்துள்ளது. பிணைமுறி மோசடி தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீதும் , நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும் அப்போதைய எதிர்தரப்பினர் பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் நல்hட்சி இரசாங்கத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடியில் ; 6.39 பில்லியன் ரூபாய் பணமே கொள்ளையிடப்பட்டுள்ளது. ஆனால் இதனுடன் தொடர்பு கொண்டுள்ள பெப்பச்சுவல் டெசரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10 பில்லியன் ரூபாய் பணத்தை நல்லாட்சி அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது. அதற்கமைய மோசடி செய்யப்பட்ட பணத்தை தடுத்து வைக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து அரசாங்கத்திற்கு எடுத்துக் கொள்ள முடியும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மத்தியவங்கி பிணைமுறி தொடர்பில் 1147 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட நட்டத்தை எவ்வாறு செலுத்தப் போகின்றார்கள் எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.