கேரள கஞ்சாவுடன் நடத்துனர் ஒருவர் கைது

257 0

அக்கறைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த பஸ்ஸின் நடத்துனரிடமிருந்து 350 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் கைப்பற்றப்பட்டது.

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மட்கே பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து நேற்று (08) மதியம் அம்பாறை மாவட்டம் அக்கறைப்பற்று பிரதேசத்தில் இருந்து திருகோணமலையை வந்தடைந்த தனியார் பேரூந்து நடத்துநரிடமிருந்து 350 கேரளா கஞ்சாவை கைப்பற்றியதாக மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

அக்கறைப்பற்றில் இருந்து தொடர்ந்து கேரளா கஞ்சா கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வழங்கப்பட்ட புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் கேரள கஞ்சாவை கைப்பற்ற முடிந்தவுடன் தொடர் கடத்தலில் ஈடுபட்டு நடத்துனரையும் கைது செய்ய முடிந்ததாக போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

அக்கறைப்பற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு பொதிகளில் ஒன்று மூதூர் பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்ட நிலையில் மற்றொரு பொதி திருகோணமலை நகரில் விநியோகிக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அக்கறைப்பற்று பிரதேசத்தில் ஊர்பொடியார் வீதியில் வசிக்கும் 23 வயதுடைய நபர் அனு எக்ஸ்பிரஸ் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வரும் நிலையில் நீண்டகாலமாக கேரளா கஞ்சாவை கடத்தும் தொழிலை மேற்கொண்ட நிலையில் இந்த கைது நிகழ்ந்ததாக போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

ஒரு அடி நீளமான எஸ்.லோன் குழாயில் கேரளா கஞ்சாவை மறைத்து வைத்திருந்து சூட்சமமாக கடத்தும் போது தங்களால் பிடிபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

கைப்பற்றபட்டன கேரளா கஞ்சாவையும் கைது செய்யப்பட்டவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு தலைமையகப் பொலிஸார் வசம் ஒப்படைத்தாக மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.