இலங்கையின் பொருளாதாரம் வழமைக்கு திரும்புவதாக IMF தெரிவிப்பு

402 0
கடந்த வருடம் ஏப்ரல் தீவிரவாத தாக்குதலின் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் வழமைக்கு திரும்பி வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7% வளர்ச்சியை எதிர்ப்பார்ப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மெனுவெலா கொரெட்டியின் தலைமையிலான சர்வதேச நாயண நிதியத்தின் பணியாளர்கள் குழுவொன்று கடந்த ஜனவரி 29 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் காலப்பகுதியில் இலங்கையில் மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தினை தொடர்ந்து அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளனர்.