ஹஜ் யாத்திரிகர்களை அரசு நேரடியாக அழைத்துச் செல்ல முடிவு

244 0

புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்றச் செல்லும் யாத்திரிகர்களை அரசாங்கத்தினூடாக நேரடியாக அழைத்துச் செல்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது

பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவிற்கும் ஹஜ் குழுவுக்கும் இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இது தொடர்பில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டதாக ஹஜ் குழு தலைவர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.

ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் தலைமையிலான ஹஜ் குழுவினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜக் ஷவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று இரவு அவரது இல்லத்தில் நடைபெற்றது.இதன்போது 2020 ஹஜ் யாத்திரை ஏற்பாடுகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஹஜ் குழு தலைவர் மர்ஜான் பளீல் குறிப்பிடுகையில்,

இம்முறை ஹஜ் முகவர்களுக்கு ஹஜ் யாத்திரிகர்களை அழைத்துத் செல்ல வாய்ப்பும் வழங்கப்பட மாட்டாது. ஒரு ஹஜ் யாத்திரிகரிடம் 5 இலட்சம் ரூபா மாத்திரமே அறவிடப்பட இருக்கின்றோம். அத்துடன் மத்தள விமான நிலையத்தினூடாகவே ஹஜ் யாத்திரிகர்களை அழைத்துச் செல்லப்பட இருப்பதோடு அதற்காக விசேட ஏற்பாடுகளை மேற்கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்

சகல ஹஜ் யாத்திரிகர்களையும் ; குறைந்த கட்டணத்தில் எந்தவித அசௌகரியங்களுமின்றி ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே ; பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அபிலாசையாகும்.அவரின்& எதிர்பார்ப்பிற்கமையவே இம்முறை முகவர்களின் தொடர்பின்றி நேரடியாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தினூடாக ஹஜ் யாத்திரிகர்களை அழைத்துத் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மத விவகார அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ,சவூதி அரேபிய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியுள்ளதோடு சவூதி அரசாங்குமும் இதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது என்றார்