ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பிற்கான விண்ணப்ப படிவங்கள் 200 ரூபாவிற்கு விற்கப்படுவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் நிதி எங்கு செல்கின்றது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ; ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த ; ஐக்கிய ; தேசிய கட்சியின் குருணாகல் ; மாவட்ட பாராளுமன்ற ; உறுப்பினர் துஷார ; இந்துனில் அமரசேன மேலும் கூறியதாவது
நாடளாவிய ; ரீதியில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு ; ஒரு ; இலட்சம் ;வேலை வாய்ப்புகளை வழங்குவதாக கூறிக்கொண்டு இந்த அரசாங்கம் ஆட்சிக்கு ; வந்தது. இந்நிலையில் , நாட்லுள்ள அனைவருக்கும் போதுமான வேலைவாய்ப்பை ; எவ்வாறு பிரித்து வழங்க முடியும் ; என்ற கேள்வி எழுகின்றது.
அந்த வகையில் ஒரு கிராம சேவகர் பிரிவிலிருந்து ஐவரையே தெரிவு செய்ய கூடியதாகவிருக்கும். ஆயினும் ஒரு ;பிரிவிற்கு ; மாத்திரம் ஒரு இலட்சம் ; விண்ணப்பங்கள் வரையில் அனுப்பி ; வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , அதற்காக ; ருபாய் கட்டணமும் அறவிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

