புதிய அரசாங்கத்தின் வருகையோடு பல ஊடகவியளார்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம்-இரான்

194 0

புதிய அரசாங்கம் பதவியேற்று 60 நாட்களில் பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நல்லாட்சியின் நான்கரை வருட காலப்பகுதியில் எந்தவொரு ஊடகவியலாளரும் நாட்டை விட்டு ​வெளியேறவில்லை.

ஆனால் புதிய அரசாங்கம் பதவியேற்று 60 நாள்களில் ஊடகத்துறையுடன் தொடர்புடைய பலர் நாட்டை விட்டுச் வெளியேறியுள்ளனர்.

தற்போதைய  அரசாங்கம் மக்களைப் போலவே ஊடகங்களையும் அச்சுறுத்தி நாட்டுக்குள் ஒழுக்கத்தை நிலை நாட்ட முயல்கின்றது.

ஆனால் சட்டத்தை உரிய முறையில் செயற்படுத்தினால் மாத்திரமே ஒழுக்கத்தை நிலைநாட்ட முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.