பாராளுமன்ற தெரிவு குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியலை விரையில் கையளிக்குமாறு அறிவிப்பு!

195 0
பாராளுமன்ற தெரிவு குழுக்களுக்கு நியமிக்கப்படவுள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியலை விரைவில் கையளிக்குமாறு சபாநாயகர் கருஜயசூரிய ஆளும், எதிர்க் கட்சி உறுப்பினர்களை கேட்டுள்ளார்.

பாராளுமன்ற பொது நிர்வாக தெரிவுக்குழு, அரச கணக்காய்வு தெரிவுக்குழு மற்றும் அமைச்சுக்களின் ஆலோசனை தெரிவுக்குழு உள்ளிட்ட தெரிவுக்குழுக்களுக்கு உறுப்பினர்களை பரிந்துரை செய்யுமாறு சபாநாயகர் கேட்டுள்ளதாக தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சபாநாயகர் தலைமையில் நேற்று (21) நடைபெற்ற பாராளுமன்ற தெரிவு குழு கூட்டத்தில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழு மற்றும் உயர் பதவிகள் தொடர்பான தெரிவுக்குழு ஆகியவற்றை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களின் பெயர்களை நாளை (23) அறிவிக்க இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கோப் மற்றும் அரச கணக்கியல் தெரிவுக்குழு உள்ளிட்ட தெரிவுக்குழுக்களுக்கான உறுப்பினர்களை விரைவில் பெயரிடுவது குறித்து நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தகவல் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அரசியல் யாப்பு தயாரிக்கும் நடவடிக்கை குழு நாளை பாராளுமன்ற கட்டட தொகுதியில் கூடவுள்ளது.

சபாநாயகர் தலைமை வகிக்கும் இந்த குழுவில் 10 உறுப்பினர்கள் அடங்குவதுடன், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இதில் பிரதான பங்கை வகிப்பர்.