ரஞ்சனின் தொலைபேசி உரையாடல் எதிரொலி- பணி நீக்கப்பட்டார் பி.பி.சி.யின் செய்தியாளர் அமீன்

273 0

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி உரையாடல் வெளியானதை தொடர்ந்து பி.பி.சி.யின் இலங்கை செய்தியாளராக செயற்பட்டு வந்த ஊடகவியலாளர் அஸாம் அமீனை அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் அவர் தொலைபேசியில் பேசிய உரையாடல் ஒலிப்பதிவு சில தினங்களின் முன்னர் வெளியாகியிருந்தது.

இதில் ஜனாதிபதி தேர்தல் தொடர்புடைய சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவு வெளியாகி உள்ளமையால் பி.பி.சி. அவரை பணிநீக்கம் செய்துள்ளது.

இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் வெளியானதால் நடிகை பியூமி ஹன்சமாலி நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ரஞ்சன் போன்ற அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு கொண்டதற்கு வருத்தம் அடைவதாக அவரது சமூக வலைப்பின்னல் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.