மைத்திரி, ரணிலுக்கு கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

326 0

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்க முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மார்ச் 6 ஆம் திகதி வரை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

இதேவேளை தாக்குதல்கள் தொடர்பான மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆஜராகாது என்றும் உயர் நீதிமன்றில் சட்டமா அதிபர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதோடு, அதில் முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.