யாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத குழு காருக்குத் தீ வைத்துள்ளது.
யாழ்.கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள வரதராஜா கேதீஸ்வர சர்மா என்பவரது வீட்டுக்குள் நேற்று இரவு புகுந்த இனம் தெரியாதவர்கள் வீட்டு வளவினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
எனினும் காருக்கு வைக்கப்பட்ட தீ முழுமையாக அதன்மீது பரவாததால், பகுதியளவில் கார் சேதமடைந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

