பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில்

324 0
தலவாக்கலை, கிரேட் வெஸ்டன் மலை உச்சிக்கு ஆய்வுக்காக சென்ற றுகுணு பல்கலைகழக மாணவர்கள் 9 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (16) மாலை இடம்பெற்றதாகவும் குளவி கொட்டுக்கு இலக்காகி காயங்களுக்கு உள்ளான மாணவர்களை 1990 என்ற அவசர நோயாளி காவு வண்டியின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரில் 3 பேர் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதோடு, ஏனைய 6 பேர் தொடர்ந்தும் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.