ஆப்கான் குண்டு வெடிப்பு – 40 பேர் பலி

4486 0

craneஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல் காரணமாக 40 கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவற்துறை தொடர் அணியை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் பொதுமக்களும் பயிற்சி பெற்று வரும் காவற்துறையினரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாக அந்த மாவட்ட ஆளுநர் ஆஜி மொஹமட் மூசாகான் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் தம்மாலேயே மேற்கொள்ளப்பட்டதாக தாலிபான் போராளிகள் உரிமைக்கோரியுள்ளனர்
ஒரு வாரத்துக்கு முன்னரும் இதே பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் காரணமாக 14 பேர் பலியாகினர்.
காபூலில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றிய நேபாளத்தைச் சேர்ந்த பாதுகாவலர் பிரிவைச் சேர்ந்தவர்களே அந்த தாக்குதலில் பலியானமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment