போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு இந்திய நீதிமன்றத்தால் 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
23 வயதான இலங்கையர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2010ஆம் ஆண்டு இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட இவரது பயணப்பையில் இருந்து இரண்டு கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டிருந்தது.
இதனையடுத்து இவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குற்றவாளிக்கு 10 வருடங்கள் சிறைத்தண்டனை மற்றும் இரண்டு இலட்சம் இந்திய ரூபாவும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

