அடுக்குமாடி கட்டிடங்களுக்கு இடையே ஸ்பைடர்மேன் பாணியில் தாவ முயற்சி: அமெரிக்காவில் இந்திய மருத்துவ மாணவர் பலி

305 0

ஸ்டைடர்மேன் போல கட்டிடங்களுக்கு இடையே தாவி குதிக்க முயற்சித்த 23 வயது இந்திய அமெரிக்க மருத்துவ மாணவர் பரிதாபமாக உயிரிழந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விவேக் சுப்பிரமணி (23), இவர் அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் ட்ரெக்செல் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார். ஒரு டாக்டராக வேண்டும் என்ற கனவோடு அவர் படித்து வந்தார்.

நேற்று முன்தினம் நண்பர்களின் உரையாடலின்போது உற்சாகம் எல்லைமீறிய நிலையில் அடுக்குமாடி ஒன்றின் உச்சியிலிருந்து இன்னொரு மாடிக்கு தாவ முயன்று கீழே விழுந்து உயிரிழந்ததாக என்ஆர்ஐ பல்ஸ் செய்தித்தாள் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

பிலடெல்பியா மாகாணத்தில் தலைநகரான பிலடெல்பியா நகரில் கூரைகளுக்கு இடையில் குதித்து உயிரிழந்தவர் 23 வயது இந்திய – அமெரிக்க மருத்துவ மாணவர் என்றும் அடையாளங் காணப்பட்டுள்ளார்.

இவர் பெயர் விவேக் சுப்பிரமணி, பிலடெல்பியாவில் உள்ள ட்ரெக்செல் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்றுவந்தார்.

விபத்து நடந்தபோது, ​​ஜனவரி 11 ஆம் தேதி இரவு சுப்பிரமணியும் இரண்டு நண்பர்களும் தங்களது அடுக்குமாடி கட்டிடத்தின் கூரைகளுக்கு இடையில் குதித்துக்கொண்டிருந்ததாக சாட்சிகள் தெரிவித்தனர்.

முன்னதாக மாலை நிகழ்ச்சியில் அவர்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர்.

சுப்ரமணியை அவரது நண்பர்கள் ரத்த வெள்ளத்தில் கண்டபோது எதுவும் பேசமுடியாமல் உறைந்துநின்றனர். எனினும் மருத்துவர்கள் வரும் வரை அவர்கள் தனது நண்பருக்கு சிபிஆர் எனதுப்படும் அவசர கால கார்டியோபுல்மோனரிமூலம் புத்துயிர் அளிக்கும் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.

பின்னர் சுப்பிரமணி, அருகில் உள்ள தாமஸ் ஜெபர்சன் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.