ஆஸ்திரேலியாவில் வறட்சி: 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் கொல்லப்பட்டன

352 0

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வக்குடியினரின் வாழ்வாதாரங்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பதாக 5 நாட்களில் சுமார் 5,000 ஒட்டகங்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வறட்சி மற்றும் கடும் காட்டுத்தீயினால் அதீத உஷ்ணங்களைத் தாங்க முடியாமல் ஒட்டகங்கள் பூர்வக்குடியினர் வசிக்கும் பகுதிகளுகு வரத்தொடங்கின. இவைகளின் வரத்தினால் நீராதாரம், ஏற்கெனவே பற்றாக்குறையில் உள்ள உணவுகள் ஆகியவற்றுக்கு ஆபத்து நேர்ந்ததால் ஹெலிகாப்டர் மூலம் சுமார் 5000 ஒட்டகங்கள் அழிக்கப்பட்டுள்ளன.