தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல், புத்தாண்டு வாழ்த்துக்கள்.

1980 0

தமிழரின் விடியலாய் விடியட்டும்.

தைமாத விடியலின் கதிரொளிகள் – அது
தமிழரின் விடியலாய் விடியட்டும்
தமிழரின் புத்தாண்டு பிறந்துமே – அது
தமிழீழ விலங்கினை உடைக்கட்டும்
உலகத்தின் விழிகளின் இமையெலாம் – இனி
தமிழரின் தடைகளை விலக்கட்டும்
உன்னத் தமிழீழ கொடியொன்று – ஐ .நா
மன்றினில் பறக்கட்டும்

தமிழீழக் கொள்கையின் ஆணிவேர் -என்றும்
உரமான ஆழத்தில் பரவட்டும்
தமிழீழ முடிவினை மாற்றுவோர் – பொய்
முகவேடம் யாவும் கிழியட்டும்
தலைவரின் சக்தியில் தோய்ப்பவர் – என்றும்
மாறாத உறுதியில் நிலைக்கட்டும்
தமிழீழ மாவீர மணிகளின் – கழல்
பணிந்துமே போராட்டம் தொடரட்டும் .