பண்டத்தரிப்பு சாந்தையில் சிறப்புடன் நடைபெற்றுள்ள கைக்கொடி மாட்டு சவாரிப் போட்டி!

388 0

பட்டிப் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கைக்கொடி மாட்டு சவாரிப் போட்டி வெண்கரம் அமைப்பினரால் பண்டத்தரிப்பு சாந்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் சிறப்புடன் நடாத்தப்பட்டுள்ளது.

சாந்தை விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையுடன் வெண்கரம் அமைப்பின் சாந்தை-சில்லாலை படிப்பகத்தின் ஏற்பாட்டில்
நடாத்தப்பட்ட கைக்கொடி மாட்டு சவாரிப் போட்டியை பலாலி சித்திவிநாயகர் வித்தியாலயத்தின் அதிபர் ந.செல்வராசா அவர்கள் தொடங்கிவைத்தார்.

வெண்கரம் அமைப்பின் சாந்தை-சில்லாலை படிப்பகத்தின் செயற்பாட்டாளர் A.S.சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளர்களாக பலாலி சித்திவிநாயகர் வித்தியாலயத்தின் அதிபர் ந.செல்வராசா, வெண்கரம் அமைப்பின் நிறுவனர் மு.கோமகன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரா.மயூதரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

வெண்கரம் அமைப்பின் சாந்தை-சில்லாலை படிப்பகத்தில் வரும் 16/01/2020 அன்று நடைபெறும் பட்டிப்பொங்கல் நிகழ்வின் இறுதியில் கைக்கொடி மாட்டு சவாரிப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.