முழு இராணுவமும் ஆவா குழுவுடன் தொடர்பு என கூறவில்லை

292 0

a86f81678f657ec34261292f611d3c0b_xlமுழு இராணுவமும் ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்டுள்ளது என்று தான் ஒரு போதும் கூறவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் ராஜித.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு நெருக்கமான ஒரு இராணுவ அதிகாரியை பயன்படுத்தி இந்த ஆவா குழு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.முன்னாள் பாதுகாப்பு செயலாளரை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு தரப்பினர் ஆவா குழுவுக்கும் அவருக்கு தொடர்பில்லை எனக் கூறி வருகின்றனர்.

இராணுவத்தினருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடவும் சிலர் முயற்சித்து வருகின்றனர்.முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் அனுமதியுடன் இராணுவத்தின் ஒரு அதிகாரி செய்த தவறால் முழு இராணுவத்திற்கும் பாதிப்பு ஏற்படாது.

இராணுவத்திற்கு நான் அவதூறை ஏற்படுத்தவில்லை. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒரு இராணுவ அதிகாரியை பயன்படுத்தி ஆவா குழுவை உருவாக்கி முழு இராணுவத்திற்கும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் இந்த விடயம் தொடர்பாக அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.