ஊடகங்கள் தொடர்பில் ரணிலின் அதிரடி நடவடிக்கை

301 0

160410155241_ranil_wickremesinghe_640x360_gettyமுதலீட்டாளர்களுக்காக அரசாங்கம் வழங்கும் நிவாரணம் தொடர்பில் எதிர்வரும் வாரம் அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் சில ஊடகங்கள் போலி பிரச்சாரங்களை முன்னெடுப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து விடயங்களுக்கும் எல்லை உண்டு என்பதனால் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து போலி பிரச்சாரங்களை முன்னெடுக்கும் ஊடகங்களை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கே எங்களை இல்லாமல் ஆக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எங்களுக்கு அவசியம். எனினும் இந்த இரண்டு கட்சியுடன் இணைவது ஊடகங்களுக்கே பிரச்சினையாக உள்ளது.

நாங்கள் இணைந்தால் ஊடகங்கள் வீழ்ந்து போய்விடுவதென்பது ஊடகங்களுக்கு பிரச்சனையாக உள்ளது. அவற்றிற்கு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.