வரிகளை உயர்த்த தமிழக அரசு திட்டம்?

337 0

வரிகளை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரி மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்க இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

தமிழக அரசுக்கு வரி மூலம் வரும் வருவாய் குறைந்து வருகிறது.கடந்த ஆண்டு ஏப்ரல்- செப்டம்பர் மாதங்களில் மத்திய வரி மூலம் தமிழக அரசுக்கான பங்கு ரூ.12,520 கோடி கிடைத்தது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.4 சதவீதம் குறைவாகும். மாநிலம் மூலம் கிடைக்கும் மொத்த வரி வருவாயில் 3.42 சதவீதமே உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக வரிகளை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரி மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்க இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

அதன்படி கலால் வரி அல்லது வாகன வரிகளை உயர்த்த திட்டமிட்டுள்ளது.