இலங்கை தோல்வி – மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

4662 0

hrw66dஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை தோல்வி கண்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கிறது.
மனித உரிமைகள் பேரவையின் 32 வது அமர்வில் இன்று கருத்துரைத்த மனித உரிமை கண்காணிப்பகத்தின் பிரதிநிதி, மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முக்கியமான முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதில் காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் குறித்த அலுவலகம் கண்டறியும் விடயங்கள் நேரடியாக குற்றச்சாட்டுக்களுக்குறிய பொறிமுறைக்குள் உள்வாங்கப்படுவதற்கான சட்ட உறுதிப்பாடு அவசியம் என கண்காணிப்பக பிரதிநிதி கோரினார்.
இலங்கையில் பயங்கரவாத தடைசட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளமையை அவர் சுட்டிக்காட்டினார்.
போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் அவசியம் என்ற விடயம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரால் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நேற்று உரையாற்றிய இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர 2015ஆம் ஆண்டு இலங்கை ஏற்றுக்கொண்ட ஜெனிவா யோசனை நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை என குறிப்பிடடுள்ளார்.
எனினும் இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும் உள்நாட்டு நீதிபதிகள் மாத்திரமே அதில் இணைக்கப்படுவர் என கூறிவருவது பொது மக்கள் மத்தியில் தவறான தோற்றப்பாட்டை கொண்டுச் செல்லக்கூடும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a comment