நெல்லை கண்ணன் கைது ஏன்? முதல்வர் பழனிசாமி விளக்கம்

257 0

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து அவதூறாக பேசினார்.
இது தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்லை கண்ணனை கைது செய்தனர்.
இந்நிலையில், நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
எந்த கட்சி தலைவராக இருந்தாலும் அவர்களைப் பற்றி வரம்பு மீறி பேசக் கூடாது. நெல்லை கண்ணன் விவகாரத்தில் சட்ட ரீதியாகவே நடவடிக்கை எடுத்துள்ளோம். நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் அரசுக்கு இல்லை.
நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன் கைது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பதில் அளித்துள்ளார்.
கோலம் பாடுபவர்கள் தங்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டிருந்தால் பிரச்சினை இல்லை. வெறொருவர் வீட்டு வாசலில் கோலமிட்டது குறித்து வீட்டு உரிமையாளர் புகாரளித்ததால் கைது செய்யப்பட்டார் என்று கூறியுள்ளார்.