‘‘கோலம் போடுவதன் மூலம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க முடியும்; குமாரவேலுவின் முயற்சி’’ – ஸ்டாலின் பாராட்டு

264 0

கோலம் போடுவதன் மூலம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க முடியும் என்ற சென்னை மாநகராட்சி மண்டல உதவி பொறியாளர் குமாரவேலுவின் யோசனை பாராட்டுக்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘கோலம் போடுவதன் மூலம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க முடியும்’ என்ற புதிய யோசனையை மக்களிடம் கூறி மாநகரின் தூய்மை காக்கும் சென்னை மாநகராட்சி திரு.வி.க மண்டல உதவி பொறியாளர் குமாரவேலுவின் முயற்சி பாராட்டுக்குரியது!

M.K.Stalin

@mkstalin

‘கோலம் போடுவதன் மூலம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க முடியும்’ என்ற புதிய யோசனையை மக்களிடம் கூறி மாநகரின் தூய்மை காக்கும் சென்னை மாநகராட்சி திரு.வி.க மண்டல உதவி பொறியாளர் குமாரவேலுவின் முயற்சி பாராட்டுக்குரியது!

இந்த முயற்சிக்கு தோள் கொடுத்த மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்!

இந்த முயற்சிக்கு தோள் கொடுத்த மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்’’ எனக் கூறியுள்ளார்.