ஒற்றையாட்சியுமில்லை-சமஷ்டியுமில்லை புதிய தீர்வு பற்றி ஆலோசனை!

283 0

ranil-maithriஒற்றையாட்சிக்கு தமிழர் தரப்பும் சமஷ்டி ஆட்சிக்கு சிங்களவர்களும் எதிர்ப்புத் தெரிவிப்பதால் புதிய தீர்வு குறித்து, அதாவது இரண்டுக்கும் ஒரு பொதுவான தீர்வுத்திட்டத்தை தயாரிப்பதற்கு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபாலசிறிசேன மற்றும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அரசாங்கத்திற்குள் ஒருசிலர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தரப்பினர் இவ்வானதொரு நிலைப்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், புதிய முறையானது சகல மக்களினதும் பிரச்சனைகள் தீர்க்கப்படும் வகையில் அமையவேண்டுமெனவும், இனங்களுக்கிடையில், பிரச்சனைகளையும், முரண்பாடுகளையும் தோற்றுவிக்கக்கூடாதென்பதும் இத்தரப்பினரின் நிலைப்பாடாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டிற்கு சிக்கலை ஏற்படுத்தும் கோரிக்கைகளை தமிழர் தரப்பு முன்வைக்கக்கூடாதென்ற நிலைப்பாட்டில் இத்தரப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.