ஜெனரல் குவாசிம் சுலைமானியின் உடல் ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டது!

304 0

ஈராக்கில் வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட ஈரானின் புரட்சிகர காவல் படைப் பிரிவின் தலைவரான ஜெனரல் குவாசிம் சுலைமானியின் உடல் ஈரானக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய ஐ.ஆர்.ஐ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானின் தென் மேற்கு நகரமான அஹ்வாஸுக்கு அவரது உடல் இன்று ஞாயிறுக்கிழமைக்கு முன்னதாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

குவாசிம் சுலைமானி ஈராக்கின், பக்தாத் விமான நிலையத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த வேளையில் அமெரிக்க படையினர் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக சுலைமானி, ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வந்த கிளர்ச்சிப்படை பாப்புலர் மொபைலைசேஷன் ஃபோர்ஸ்(பிஎம்எப்) படையின் துணைத் தளபதி அபு மஹதி அல் முஹன்திஸ் உட்பட 10 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்

இதேவேளை நேற்று சனிக்கிழமையன்று பக்தாத்தில் இடம்பெற்ற குவாசிம் சுலைமானி மற்றும் அல் முஹன்திஸின் இறுதி ஊர்வலத்தின் போது, ஈராக் பிரதமர் உட்பட ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டிருந்ததுடன், அமெரிக்காவுக்கு எதிராக பல கோஷங்களும் எழுப்பபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.