கனடாவின் சாடில் க்ரெஸ்ட் பெளல்வோர்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது சனிக்கிழமை இரவு 7.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதையடுத்து பொலிஸார் குறித்த பகுதியை சுற்றிவளைத்து விசேட சோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.
எனினும் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதன்போது கைதுசெய்யப்படாத நிலையில் விசாரணைகளை முன்னெடுத்துள்னர்.
இதேவேளை சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உயர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

