பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாரியபொல தெமட்டலுவ புராதன பொத்குல் விஹாரைக்கு நேற்று (04) விஜயம் செய்தார்.
இதன் போது, வடமேல் மாகாண பிரதம சங்க நாயக்கரான சங்கைக்குரிய ஸ்ரீ ஜினரத்தன நாயக்க தேரரிடம் ஆசி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, குருநாகல் பௌத்தாலோக்க வித்தியாயத்தன பிரிவென் விஹாரைக்கு சென்ற பிரதமர், விஹாராதிபதி சங்கைக்குரிய கல்னேவ தம்மரத்தன தேரரிடமும் ஆசி பெற்றார்.
இந்த விஜயத்தில் அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர்களான டி.பி ஏக்கநாயக்க, டி.பி ஹேரத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மின் ஆகியோர் இணைந்து கொண்டனர்.

