மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்- ஓ.பன்னீர்செல்வம்

304 0

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், மக்களின் தீர்ப்பை நாங்கள் தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், அது மக்களின் தீர்ப்பு. எனவே மக்கள் தீர்ப்பை நாங்கள் தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

நிருபர்கள் அவரிடம் மேலும் சில கேள்விகளை கேட்க முயன்றனர். ஆனால் அவர் விமானத்துக்கு நேரமாகிவிட்டது என்று கூறி சென்றுவிட்டார்.