அரசகரும மொழிகளில் ஒன்றாக தமிழை பேணுவதில் சிங்கப்பூர் அரசாங்கம் கடும் உறுதி

169 0

சிங்­கப்­பூரின் அர­ச­க­ரும மொழி­களில் ஒன்­றாகத் தமிழைத் தொடர்ந்தும் பேணு­வதில் சிங்­கப்பூர் அர­சாங்கம் உறு­தி­பூண்­டி­ருக்­கி­றது. தமிழ்­மொழி சிங்­கப்பூர் பாரா­ளு­மன்­றத்தில், பாட­சா­லை­களில் தாய்­மொ­ழி­யாகப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

அச்சு ஊட­கங்­களும், இலத்­தி­ர­னியல் ஊட­கங்­களும் தமி­ழுக்கு மிகவும் ஆத­ர­வாக இருப்­ப­துடன், ஏனைய உத்­தி­யோ­க­பூர்வ நிகழ்­வு­க­ளிலும் தமிழ்­மொழி பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. ஆங்­கிலம், சீன­மொழி மற்றும் மலே மொழி ஆகி­ய­வற்­றுடன் சேர்த்து தமிழ் மொழியும் ரூபா நோட்­டு­க்களில் அச்­சி­டப்­ப­டு­கி­றது. தமி­ழுக்­கு­ரிய அந்த அந்­தஸ்தை எந்தத் தடங்­க­லு­மின்றித் தொடர்ந்து பேணு­வதில் அர­சாங்கம் முழு­மை­யான உறு­தி­யுடன் இருக்­கி­றது.

சிங்­கப்­பூரின் வெளி­யு­றவு அமைச்­ச­ரான விவியன் பால­கி­ருஷ்ணன் கடந்த ஞாயி­றன்று வெளி­யிட்­டு­வைத்த ‘தமிழ் சமூ­கமும், நவீன சிங்­கப்­பூரின் உரு­வாக்­கமும்’ என்ற நூலில் பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருக்கும் நேர்­கா­ண­லொன்­றி­லேயே அந்­நாட்டின் வர்த்­தக உற­வுகள் மற்றும் தகவல் தொடர்­புகள் அமைச்­ச­ரான எஸ்.ஈஸ்­வரன் இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

அந்த நூலை அந்­நாட்டில் வாழும் இந்­தி­ய­ரான ‘ஒன்லைன் வொய்ஸ்’ என்ற இணைய ஊட­க­சே­வையின் ஆசி­ரி­ய­ரான சௌந்­த­ர­நா­யகி வைர­வனும், மூத்த சிங்­கப்பூர் பத்­தி­ரி­கை­யா­ள­ரான ஏ.பி.ராமனும் கூட்­டாக எழு­தி­யி­ருக்­கி­றார்கள்.

‘தமிழ் தொடர்பில் சிங்­கப்பூர் அர­சாங்­கத்தின் கொள்கை நிலைப்­பாடும், அதற்கு வழங்­கப்­ப­டு­கின்ற ஆத­ரவும் மிகவும் தெளி­வா­னது. மிகுதி தமிழ்ச் சமூ­கத்தின், குறிப்­பாக எமது இளை­ஞர்­களின் கைக­ளி­லேயே தங்­கி­யி­ருக்­கி­றது. அவர்கள் தமிழை ஆரத்­த­ழுவி அன்­றாட வாழ்வில் பயன்­ப­டுத்தி அதனை வாழும் மொழி­யாக ஆக்­க­வேண்டும்.

இளந்­த­லை­மு­றை­யி­ன­ரையும், பரந்­து­பட்ட தமிழ்ச்­ச­மூ­கத்­தையும் தமிழின் வளர்ச்­சி­யிலும் அதன் கலா­சா­ரத்­திலும் தீவி­ர­மாக ஈடு­ப­டுத்­து­வ­தற்குத் தமிழ்­மொழி உற்­ச­வங்­களை ஏற்­பாடு செய்­வது ஒரு வழி­யாகும்’ என்று ஈஸ்­வரன் நேர்­கா­ணலில் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

இந்த நூல் ஆரம்ப நாட்­களில் சிங்­கப்­பூரில் இந்­தி­யர்­களின் வரு­கையை ஆவ­ணப்­ப­டுத்­து­கி­றது.

அவ்­வாறு வந்த இந்­தி­யர்­களில் சிப்­பாய்கள், தொழி­லா­ளர்கள், வர்த்­த­கர்கள், கடன்­கொ­டுப்­ப­வர்கள், சிவில் சேவை­யா­ளர்­களும் அடங்­குவர். கால­னித்­துவ அர­சாங்கம் இந்­தி­யாவில் குற்­ற­வா­ளி­யாகக் காணப்­ப­டு­கின்­ற­வர்­களை 1787ஆம் ஆண்டு முதல் சுமாத்­தி­ரா­வி­லுள்ள பென்­கூலன் பகு­திக்கும், 1990ஆம் ஆண்­டி­லி­ருந்து மலே­சியத் தீப­கற்­பத்­தி­லுள்ள பினாங்­கிற்கும் அனுப்­பிக்­கொண்­டி­ருந்­தது.

1830களில் சிங்­கப்­பூரும், மலே­சி­யத்­தீ­ப­கற்­பத்தின் மலாக்கா மற்றும் பினாங் துறை­முக நக­ரங்­களும் பிரிட்டிஷ் கால­னித்­துவ ஆட்­சியின் கீழ் கால­னி­க­ளாக மாறின என்று ஆய்­வா­ளர்­களை மேற்­கோள்­காட்டி அந்த நூலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. தேர்ச்­சி­யற்ற தொழி­லா­ளர்­க­ளையும், ஒப்­பந்த அடிப்­ப­டை­யி­லான தொழி­லா­ளர்­க­ளையும் பெறு­வ­தற்கு பிரிட்டிஷ் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு இந்­தியா ஒரு பிர­தான மூல­மாக இருந்­தது. இந்தத் தொழி­லா­ளர்கள் ஆரம்ப நாட்­களில் சிங்­கப்­பூரில் உட்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளையும், கட்­டி­டங்­க­ளையும் நிர்­மா­ணிப்­ப­தற்குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டார்கள்.

தென்­னிந்­தி­யர்கள், குறிப்­பாகத் தமி­ழர்கள் இயல்­பா­கவே தங்­க­ளது மேல­தி­கா­ரி­களின் உத்­த­ர­வு­களைப் பணி­வாகக் கேட்டுச் செயற்­ப­டு­ப­வர்­க­ளாக இருந்­தார்கள். அவர்கள் பெரும்­பாலும் கல்விப் பின்­பு­லத்தைக் கொண்­டி­ரா­த­வர்­க­ளா­கவும், தரங்­கு­றைந்த வாழ்க்கை நிலை­மை­களின் கீழ் குறைந்­த­ளவு சம்­ப­ளத்தை ஏற்­றுக்­கொள்­வ­தற்குத் தயா­ராக இருந்­தார்­க­ளென்றும் நூலில் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

கால­னித்­துவ ஆட்­சி­யா­ளர்கள் வெளி­யே­றிய பின்­னர்தான் சிங்­கப்பூர் பொரு­ளா­தார ரீதியில் முன்­னேற்றம் கண்­டது. தமிழ்ச்­ச­மூ­கமும் பல்­து­றை­களில் முன்­னேறி சிங்­கப்­பூரின் சுபீட்­ச­மிகு சமு­தா­யத்தின் ஓரங்­க­மாக மாறியது.

நவீ­ன­ காலத் தமிழ்ச்சமூகத்தினால் சிங்கப்பூருக்குச் செய்யப்பட்ட மிக உயர்ந்த சேவையென்று நோக்குகையில் 1999 செப் டெம்பர் முதலாம் திகதி தொடக்கம் 2011 ஆகஸ்ட் 31 ஆம் திகதிவரை சிங்கப்பூரின் ஜனாதிபதியாகப் பணியாற்றிய எஸ்.ஆர்.நாதன் என்று பிரபலமாக அறியப்பட்ட செல்லப்பன் நாதனின் சேவையாகும்.

அதேபோன்று ஏனைய இந்தியர்கள் அமைச்சர்களாக, சிரேஷ்ட சிவில் சேவை யாளர்களாக, தனியார்துறையில் வர்த்தகத் தலைவர்களாகவும் சேவையாற்றியிருக்கி றார்கள் என்றும் அந்த நூலில் கூறப்பட்டி ருக்கிறது.