சுகாதார அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்ற சிறப்புக் கலந்துரையாடல்!

302 0

சுகாதார அமைச்சின் காரியாலயத்தில் நேற்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, அமைச்சின் உறுப்பினர்கள் மற்றும் சுகாதார பிரிவின் தொழிற் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது பரிபூரண மற்றும் மேலதிக வைத்திய சேவைகளில் ஈடுப்படும் உத்தியோகஸ்தர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் , அவர்களுக்கான நலன்புரி வசதிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், சுகாதாரசேவையை சிறந்த முறையில் வழங்குவதற்காக பௌதீக வளத்தையும் , மனிதவளத்தையும் அபிவிருத்தியடையச் செய்வதின் முக்கியத்துவம் தொடர்பிலும் பெரிதும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தொழிற்சங்கத்தினர் அவர்களுக்குறிய தொழிற்சங்கங்களில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடியப் போது ,இதனை நிவர்த்தி செய்வதற்காக நியமனங்கள் வழங்குவது தொடர்பிலும் , அவ்வாறு நியமனங்களை பெறுபவர்களின் மனநிலைமைகள் தொடர்பில் அக்கறை செலுத்துவதன் அவசியம் தொடர்பிலும் அமைச்சின் அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இதன்போது குடும்ப சுகாதார சேவையில் காணப்படும் குறைப்பாடுகள் மற்றும் நியமனங்கள் தொடர்பிலும் அமைச்சருக்கு தெரிவித்தப்போது, அதில் காணப்படும் குறைப்பாடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் அனைத்து குறைபாடுகளையும் விரைவில் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு  அமைச்சின் உறுப்பினர்களுக்கு ஆலாசனைகளை வழங்கியுள்ள சுகாதார அமைச்சர் , குடும்ப சுகாதார சேவையாளர்களின் பயிற்சிக்கான காலவகாசத்தை அதிகரிப்பது தொடர்பிலும் , பயிற்சி நிலையத்தின் தற்போதைய நிலை தொடர்பிலும் சங்கத்தினருடன் கலந்துரையாடியுள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் பி.எம்.எஸ்.சால்ஸ், சுகாதார சேவை நிறைவேற்றுப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க , அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.