மட்டக்களப்பில் டெங்கு தாக்கம் தொடர்ந்தும் அதிகரிப்பு – இதுவரை 1879 பேர் பாதிப்பு

273 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குத் தாக்கம் தொடர்ந்தும் அதிகரித்து வருதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வி. குணராஜசேகரம் தெரிவித்தார்.

இவ்வாண்டு ஐனவரி முதலாம் திகதியில் இருந்து டிசெம்பெர் 13 வரை 1879 பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை டிசெம்பெர் 06ஆம் திகதி தொடக்கம்; டிசெம்பெர் 13ஆம் திகதிவரையும் 128 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

இந்தவாரம் மட்;டக்களப்பு பிரிவில் 30 பேர், ஆரையம்பதி 21 பேர், ஏறாவூர் 18 பேர் ,களுவாஞ்சிகுடி 17 பேர் , செங்கலடி 14 பேர், வாழைச்சேனை 07 பேர்  ,வவுனதீவு 06 பேர், வெல்லாவெளி 05 பேர், ஓட்டமாவடி 04 பேர் , காத்தான்குடி 03 பேர், பட்டிப்பளை 02,கோறளைப்பற்று மத்தி 01 ஆகிய பகுதியில்; டெங்குத் தாக்கத்திற்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.