
தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு இன்று 98-வது பிறந்தநாள். அவர் உடல் நலக்குறைவால் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.இதனால் பிறந்தநாள் வாழ்த்து கூற கட்சியினர் சந்திக்க வரவேண்டாம் என்று அன்பழகன் கேட்டுக்கொண்டார்.
இன்று காலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகன் வீட்டுக்கு முக.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அவருடன், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரும் சென்று இருந்தனர்.
பின்னர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பேராசிரியர் பொதுச்செயலாளர் மட்டுமல்ல, எனது பெரியப்பா. நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் முதுபெரும் தந்தை, இனமானம் தன்மானம் ஊட்டிய தாய், இயக்கம் நடத்த வழிகாட்டிய அண்ணன். 98-வது பிறந்தநாளில் பேராசிரியர் பெருந்தகையை, வணங்கி, வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் நேரில் சென்று அன்பழகனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வீட்டுக்கு இன்று காலை முக.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவருடன், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரும் சென்று இருந்தனர்.