நாடளாவிய ரீதியிலுள்ள அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாக முன்னர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மழை குறைவடைந்துள்ளதன் காரணமாக நாடு முழுவதும் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டெங்கொழிப்பு நடவடிக்கை குறித்து அதிபர்கள் மாத்திரமல்லாது அனைத்து பாடசாலைகளிலுமுள்ள அபிவிருத்தி சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் என்பன இணைந்து இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

