இரண்டு வாரங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைவர் அவசியம்-அஜித்

222 0

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டியது அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.

விசேட ஊழல் எதிர்ப்பு நீதிமன்றங்களை அமைக்க தான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் ஆனால் நடைமுறையில் உள்ள தலைமைத்துவத்தினால் எந்தவித பிரயோசனமும் கிடைக்காது போனதாகவும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக எந்த விடயம் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான தலைவருடன் இணைந்து பொதுத் தேர்தலுக்கு செல்ல முடியாது என்பதால் கட்சிக்கு புதிய தலைமைத்துவம் அவசியம் எனவும் அவர் கூறினார்.

கடந்த அரசாங்க காலத்தில் திருடர்களை பிடிப்பது, அரசியல் பழிவாங்கல்களுக்கு எதிராக செயற்படாமை, தேவையற்ற ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டமை, நாட்டில் நிலவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய வகையில் தலையிடாமை ஆகிய காரணங்களுக்காக மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலைமைகள் மாறினால், தற்போதைய அரசியல் நிலைமையை எளிதில் மாற்ற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.