சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.
பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் இந்தக் கோரிக்கையை வைத்திருந்த நிலையில் வழக்கு விசாரணை தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி ஐஐடி மாணவி பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் கிளப்பியுள்ளது.
ஏற்கெனவே கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இது சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் விசாரணையில் இறங்கி விசாரணை மேற்கொண்டதையடுத்து விசாரனை மத்தியக் குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. கூடுதல் ஆணையர் ஈஸ்வர மூர்த்தி தலைமையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமாவின் தந்தை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் முறையிட்டிருந்தார். மேலும் ஐஐடி மாணவர்கள் தற்கொலை விவகாரம் அனைத்தையுமே சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

