கோட்டாபய ராஜபக்ஷவின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு வழங்க தயார்-jvp

373 0

நாட்டுக்கு பாதகமான அமெரிக்க எம்.சி.சி உடன்படிக்கையில் எவ்விதத்திலும் தற்போதைய அரசாங்கம் கைச்சாத்திடாது என நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

ஏகாதிபத்திய செல்வாக்கினை இந்நாட்டில் இருந்து அகற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்கக்கூடும் என அவர் தெரிவித்தார்.

களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு வழங்க மக்கள் விடுதலை முன்னணி தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.