யேர்மனி ஸ்ருட்காட் சிறீ சித்திவிநாயகர் கோவிலின் நிதிப்பங்களிப்பில் மட்டு, கோறளைப்பற்று பிரதேச மக்களுக்கு வெள்ள நிவாரணம்.

455 0

இன்று 13.12.2019 யேர்மனி ஸ்ருட்காட் நகரில் எழுந்தருளியிருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவிலின் நிதிப் பங்களிப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பிரம்படித்தீவு,சாராவெளி,சுங்காங்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 191 குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும்  1914 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

நேற்றைய தினம் 12.12.2019 அன்று சிறீ சித்திவிநாயகர் கோவில் ஸ்ருட்காட் அமைப்பூடாக மட்டக்களப்பு கோறளைப்பற்று, தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்குள் அடங்கிய பூலாக்காட்டு கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட முருக்கன்தீவு கிராமத்தில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட 59 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.