சட்டவிரோத மண், மணல் அகழ்வு – உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்க அதிபர் உத்தரவு

336 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆங்காங்கே இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சட்டவிரோத மண், மணல் அகழ்வு குறித்து நடவடிக்கை எடுக்குமாறு  அரசாங்க அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைவாக விடயங்களைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட அரசாங்க அதிபர் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கை இடம்பெற்று வருவதை நேரில் அவதானித்து உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதனை கட்டுப்படுத்துவதற்கான மட்டக்களப்பு மாவட்ட  பதில் மாவட்ட பொலிஸ் அதிகாரி எஸ். குமாரசிறி, விசேட அதிரடிப்படையின் இணைப்பு அதிகாரி தென்னக்கோன் அகியோருக்;கு இச்சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற நபர்களை சட்டத்தின் முன்னிறுத்துமாறு அரசாங்க அதிபர் இன்று செவ்வாய்க்கிழமை 10.12.2019 பணிப்புரை விடுத்தார்.

இவ்வாறான சட்டவிரோத மணல், மண் அகழ்வுகள் இரவு பகலாக இடம்nறுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோத மண் அகழ்வுகளால் இயற்கைப் பாதிப்புக்களும், பாதைகள் சேதம் ஆக்கப்படுவதும் இடம்பெற்றுவருவதாக அவதானிப்பாளர்கள் கூறுகின்றனர்.